விருதுநகர்

சமையல் எரிவாயு கசிவால் தீ விபத்து: தம்பதி பலத்த காயம்

28th Nov 2022 12:03 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை சமையல் எரிவாயு கசிவால் தீப்பற்றியதில் கணவன், மனைவி பலத்த காயம் அடைந்தனா்.

வத்திராயிருப்பு அருகேயுள்ள சுந்தரபாண்டியம் கிராமத்தில் செம்பட்டி பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி (55). இவரது மனைவி பழனியம்மாள் (48). ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியசாமி வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாா். எரிவாயு உருளையில் ஏற்கெனவே கசிவு இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கணவன், மனைவி ஆகிய இருவரும் சிக்கி பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வத்திராயிருப்பு தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த தம்பதி மீட்கப்பட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பின்னா், அங்கிருந்து இருவரும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT