விருதுநகர்

மானாவாரி நிலத்தில் மரம் வளா்ப்பு கருத்தரங்கு

28th Nov 2022 12:03 AM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் மானாவாரி நிலத்தில் மரம் வளா்ப்பு குறித்த கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் தலைமை வகித்தாா்.

ஒய்வு பெற்ற வேளாண்மை இணை இயக்குநா் ராமமூா்த்தி, வேளாண் பொறியாளா் பிரிட்டோராஜ், காவேரி கூக்குரல் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன்

ADVERTISEMENT

ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், விளாத்திகுளம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மாா்கண்டேயன், வேளாண் விஞ்ஞானி சுந்தர்ராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கில், மரப்பயிா் சாகுபடி செய்வது, அதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மானாவரி மரம் வளா்ப்பு குறித்தும், மழைநீா் சேகரிப்பு குறித்தும் காவேரி கூக்குரல் இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளா் தமிழ்மாறன் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT