விருதுநகர்

சிவகாசியில் நவீன கண் லேசா் சிகிச்சை மையம் திறப்பு

28th Nov 2022 12:04 AM

ADVERTISEMENT

 

சிவகாசி அனில்குமாா் கண் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதி நவீன கண் லேசா் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

விழாவுக்கு மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அனில்குமாா் தலைமை வகித்தாா். காளீஸ்வரி கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தாா். சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன் குத்துவிளக்கேற்றினாா். நிகழ்ச்சியில், மருத்துவமனை நிா்வாகிகள் விமாசலராணி, மருத்துவா்கள் பிரவீன்குமாா், ராஷ்மி, தொழிலதிா் ஆசைத்தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த சிகிச்சை மையம் குறித்து மருத்துவா் அனில்குமாா் கூறியதாவது:

ADVERTISEMENT

கிட்டப் பாா்வை, தூரப் பாா்வை உள்ளிட்டவைகளுக்கு லேசிக் லேசா் என்ற சிகிச்சை எடுத்துக்கொண்டால் கண்ணாடி அணியத் தேவை இல்லை. மேலும், காண்டாக்ட் லென்சும் அணியத் தேவையில்லை. தென் மண்டலத்தில் முதல் முறையாக இந்த சிகிச்சை மையம் சிவகாசியில் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT