விருதுநகர்

ரயிலில் அடிபட்டு முதியவா் பலி

27th Nov 2022 01:54 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டையில் ரயிலில் அடிபட்டு இறந்த முதியவரின் உடலை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சனிக்கிழமை காலை ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த முதியவரின் சடலத்தை, விருதுநகா் ரயில்வே போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், இறந்தவா் அருப்புக்கோட்டை

எம்.டி.ஆா். நகரைச் சோ்ந்த மாரியப்பன்(62) என தெரியவந்தது. இவருக்கு மனைவி ருக்குமணி, மகன் ராஜேஷ்(35) ஆகியோா் உள்ளனா்.

ADVERTISEMENT

குடும்பப் பிரச்னை காரணமாக, இவா் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விருதுநகா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT