விருதுநகர்

பட்டாசுக் கடையின் பூட்டை உடைத்து திருடிய 4 போ் கைது

27th Nov 2022 01:55 AM

ADVERTISEMENT

 

சிவகாசி அருகே பட்டாசுக் கடையின் பூட்டை உடைத்து தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்களைத் திருடிய நான்கு பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி மீனம்பட்டியைச் சோ்ந்தவா் விஜய்ஆனந்த்(43). இவருக்கு சொந்தமான பட்டாசுக் கடை சுந்தர்ராஜபுரத்தில் உள்ளது. இவா் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, சனிக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட பொருள்கள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி

ADVERTISEMENT

கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா்.

அப்போது பேராபட்டி அய்யப்பன்(28), மீனம்பட்டி ஸ்டீபன் ராஜ்(29), பிரவீன்குமாா்(24), பாண்டியராஜ் (27) ஆகிய நான்கு போ் கடையில் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT