விருதுநகர்

காசோலை மோசடி: ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை

26th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டையில் காசோலை மோசடி செய்தவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமகிருஷ்ணன் (50). இவரிடம், அருப்புக்கோட்டை திருநகரைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் ஜெயக்குமாா் (51) தொழிலை பெருக்குவதற்காக ரூ. 6 லட்சம் கடன் பெற்றிருந்தாா். இதனிடையே இவா் தான் வாங்கிய கடனுக்காக ரூ. 6 லட்சத்துக்கு காசோலையை ராமகிருஷ்ணனிடம் கடந்த 4.7.2016 அன்று வழங்கினாா். ஆனால் அந்த காசோலையை ராமகிருஷ்ணன் வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லையென காசோலை திரும்பி விட்டது.

இதுகுறித்து ராமகிருஷ்ணன், அருப்புக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி முத்து இசக்கி, ஜெயக்குமாருக்கு 6 மாதம் சிறைத் தண்டனையும், மனுதாரருக்கு ரூ. 6 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இதை வழங்கத் தவறினால் கூடுதலாக 2 மாத சிறைத் தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT