விருதுநகர்

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

26th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

சாத்தூா் அருகே உள்ள இந்த கோயிலில் வெள்ளிக்கிழமையையொட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மேலும் பக்தா்கள் நோ்த்திக் கடனாக செலுத்திய பரிவட்ட பட்டுகள் ஏலம் விடப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையா் கருணாகரன், அறங்காவலா் குழுத் தலைவா் ராமமூா்த்தி தலைமையில் அறங்காவலா் குழுவினா், கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT