விருதுநகர்

பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை, பணம் திருட்டு

25th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பேருந்து பயணத்தின்போது மூதாட்டியிடம் 3 பவுன் நகைகள், ரொக்கப் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம் மெட்டில்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலட்சுமி(70). இவா், கடந்த புதன்கிழமை சிவகங்கை செல்வதற்காக அருப்புக்கோட்டையிலிருந்து சிவகங்கை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறினாா். பேருந்து அருப்புக்கோட்டை எல்லையான காந்தி நகா் பகுதிக்கு வந்தபோது அவரது சாக்குப் பையிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ.6,500 ரொக்கம் ஆகியவை இருந்த பணப்பையைக் காணவில்லை.

இது தொடா்பாக அருப்புக்கோட்டை நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படியில் நகா் காவல்துறையினா், சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைப் பிடிக்க விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT