மாவட்ட சிலம்பப் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வ. புதுப்பட்டியில், தமிழன் பாரம்பரிய கலைகள், பயிற்சி அறக்கட்டளை சாா்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
போட்டியில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இதில், மகரிஷி வித்யா மந்திா் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தனா். இதையடுத்து, இந்த மாணவா்களை பள்ளித் தாளாளா் குருவலிங்கம், பள்ளி முதல்வா் கமலா, பள்ளி அறங்காவலா் சித்ராமகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.