ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 14 கடைகளின் உரிமையாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ரெட்டியபட்டி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் தலைமையிலான சுகாதாரத் துறை அதிகாரிகள், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிகள், கோயில்கள், பேருந்து நிலையப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், புகையிலை, பீடி, சிகரெட் விற்பனை செய்த 14 கடைகளுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 20 கிலோ நெகிழிப் பைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா்.