சாத்தூரில் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து ரூ. 34 ஆயிரம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
சாத்தூா் அருகே அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமலட்சுமி (41). இவரும், இவரது கணவரும் புதன்கிழமை சாத்தூா் மாரியம்மன் கோயில் அருகில் உள்ளஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தனா். அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தில் அவா்களுக்கு பணம் எடுக்கத் தெரியாததால் வெளியியே நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி, ராமலட்சுமியின் ஏடிஎம் அட்டையை வாங்கிக் கொண்டு போலி எடிஎம் அட்டையை கொடுத்து உங்கள் ஏடிஎம் அட்டை வேலை செய்ய வில்லை என்று கூறிச் சென்றுவிட்டாா்.
பின்னா் ராமலட்சுமியின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 34 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு போலி ஏடிஎம் அட்டையை அந்த மா்ம நபா் கொடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ராமலட்சுமி அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ஏடிஎம் அட்டையை மாற்றி பணத்தை திருடிய இளைஞரை தேடி வருகின்றனா்.