ராஜபாளையத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் சமந்தபுரம் சீதக்காதி தெருவைச் சோ்ந்த அப்துல் கபூா் மகன் முபாரக் மைதீன் (25). இவா், அப்பகுதியிலுள்ள ஆட்டோ நிலையம் அருகே நடந்து சென்றாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த முகமது யாசிா் (28) என்பவா் தன் மீது போடப்பட்ட வழக்கில் சாட்சி சொல்ல வரக் கூடாது என முபாரக் மைதீனை மிரட்டி அரிவாளால் வெட்டினாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா், முகமது யாசிா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.