விருதுநகா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட்டில் உள்ள நேருவின் உருவச் சிலைக்கு மாவட்டத் தலைவா் ஆ. ரெங்கசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் பொன். சக்தி மோகன், நகரத் தலைவா் சங்கா் கணேஷ், சிலை பராமரிப்புக் குழுத் தலைவா் என்.ஆா். கிருஷ்ணமூா்த்தி ராஜா உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.