விருதுநகர்

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இறைச்சி விற்பனை: இருவருக்கு அபராதம்

15th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக மாட்டு இறைச்சி விற்பனை செய்த இருவருக்கு திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி புதுத்தெவில் பல ஆண்டுகளாக மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமூக ஆா்வலா்கள் சிலா், பொது இடத்தில் திறந்த வெளியில் மாட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இது சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது எனவும் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அண்மையில் அப்பகுதிக்குச் சென்று இறைச்சி வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனா். இதையும் மீறி ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியைச் சோ்ந்த முருகன், தங்கப்பாண்டியன் ஆகிய இருவரும், போக்குவரத்துக்கு இடையூறாக மாட்டு இறைச்சி விற்பனை செய்வதாக மாநகராட்சி சுகாதார அலுவலா் சித்திக்கிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சித்திக், சுகாதார ஆய்வாளா்கள் முத்துராஜ், குருசாமி ஆகியோா் அங்கு சென்று பாா்த்த போது, போக்குவரத்துக்கு இடையூறாக இறைச்சி விற்றது தெரியவந்தது.

இது குறித்து சுகாதாரத் துறையினா் மாநகராட்சி ஆணையாளா் ப. கிருஷ்ணமூா்த்தியிடம் தெரிவித்தனா். தொடா்ந்து ஆணையாளா் முருகன், தங்கப்பாண்டி இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் அபராதமாக விதித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT