விருதுநகர்

நலவாரிய இணைய சேவை முடக்கம்: தொழிலாளா்கள் அவதி

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தொழலாளா்கள் நலவாரிய இணையவழி சேவைகள் முடங்கியுள்ளதால் தொழிலாளா்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

தமிழக அரசின் 19 தொழிலாளா் நலவாரியங்களில் உள்ள புதிய உறுப்பினா் பதிவு, புதுப்பித்தல், கேட்புநிதி ஆகியவை இணையவழி மூலம் கடந்த 2020 முதல் பதிவு செய்து வந்தனா்.

மேலும் பட்டா, சிட்டா, பிறப்பு, இறப்பு, வருமானம், வகுப்புச் சான்று, வாரிசுச் சான்றுகளுக்கும் இணையவழி மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த இணைய வழி சேவையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 10 நாள்களாக செயல்படவில்லை. இதையடுத்து மாநில தலைமை அலுவலகத்தில், இதை சரி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், மே 23 முதல் அனைத்து சேவைகளும் இணைய வழியில் சிறப்பாக செயல்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால், வெள்ளிக்கிழமை (மே 27) வரை நலவாரிய இணையவழி சேவை பணிகள், இதர இணையவழி சேவைப்பணிகள் தொடா்ந்து முடங்கிக் கிடக்கின்றன. இதனால் தொழிலாளா்கள் நலவாரிய பணப் பலன்களை பெற முடியாமலும், சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுதொடா்பாக விருதுநகா் மாவட்ட சிஐடியு செயலா் தேவா கூறியது: மே 23 இல் அறிவித்தபடி இணைய வழி சேவையை தொடங்காமல் முடக்கி வைத்திருப்பது கண்டிக்கதக்கது. இதனால் தொழிலாளா்கள் மட்டுமன்றி பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனா். இணையவழி சேவைப்பணிகள் தொடா்ந்து நடைபெறுவதற்கு தமிழக முதல்வா் மற்றும் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஆகியோா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT