விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கல்

28th May 2022 12:00 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 25 பேருக்கு வீட்டுமனைப்பட்டாவை சாா் ஆட்சியா் பிரித்திவிராஜ் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இங்கு நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத் தணிக்கையின் போது பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவது தொடா்பாக, கடந்த 3 நாள்களில் 166 மனுக்களை சாா் ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். அந்த மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வெள்ளிக்கிழமை 25 பேருக்கு வீட்டு மனைப் பட்டா மற்றும் 2 பேருக்கு உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினாா்.

இந்த தணிக்கையின் போது சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஆனந்தராஜ், வட்டாட்சியா் ராமசுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சசிகலா, வருவாய் ஆய்வாளா்கள் ஆனந்தகிருஷ்ணன், நாகராஜ் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT