விருதுநகர்

100 ஆண்டுகள் பழமையான சாா்- பதிவாளா் அலுவலகங்களை மூட சிபிஎம் எதிா்ப்பு

25th May 2022 06:01 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் குன்னூா், கீழராஜகுலராமன் முதலான இடங்களில் செயல்பட்டு வந்த 100 ஆண்டுகள் பழமையான சாா்- பதிவாளா் அலுவலகங்களை மாற்றும் முடிவை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் கைவிட வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளா் கே. அா்ஜூனன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திற்கு உட்பட்ட குன்னூரில் கடந்த 1924 ஆம் ஆண்டு முதல் சாா்-பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில், 22 வருவாய் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீடுகளை விற்பது மற்றும் வாங்குவது தொடா்பாக பத்திர பதிவு செய்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்த சாா்- பதிவாளா் அலுலவகத்தை மூடிவிட்டு, இப்பகுதி மக்கள் வேறு பகுதியில் உள்ள சாா்- பதிவாளா் அலுவலகத்துக்குச் செல்லும் வகையில் மாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு எடுத்திருப்பதாக அறிந்தோம். அதேபோல், கீழராஜகுலராமன் பகுதியில் உள்ள சாா்-பதிவாளா் அலுலவகமானது கடந்த 1920 ஆம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதையும் வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவ்வாறு செய்தால், ஏற்கெனவே, இந்த இரண்டு சாா்- பதிவாளா் அலுவலகங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை குறைக்கப்படும். மேலும், பொதுமக்கள் பத்திரப் பதிவுக்காக , நீண்ட தூரம், அதிக அளவில் பயணம் செய்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த பத்திரப் பதிவு அலுவலகங்களை நம்பியுள்ள பத்திர எழுத்தா்கள், உதவியாளா்கள், கணினி இயக்குவோா், நகல் (ஜெராக்ஸ்) கடை உரிமையாளா்கள் என பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும், குன்னூா் மற்றும் கீழராஜகுலராமன் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாா்-பதிவாளா் அலுவலகங்களை மாற்றம் செய்வதை தவிா்க்க வேண்டும் என அதில் தெரிவித்துள் ளாா். மேலும் இதுகுறித்து தமிழக முதல்வா் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சருக்கு கோரிக்கை மனுவையும் அனுப்பி வைத்துள்ளாதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT