விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி இன்று தொடக்கம்

25th May 2022 06:03 AM

ADVERTISEMENT

 

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி புதன்கிழமை (மே 25) தொடங்கி மே 27 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து வட்டாட்சியா் ராமசுப்ரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்ரீ வில்லிபுத்தூா் வட்டத்தில், 1431-ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் குறுவட்டம் வாரியாக சிவகாசி சாா்-ஆட்சியா் பிரித்திவிராஜ் தலைமையில் மே 25 முதல் மே 27 வரை நடைபெற உள்ளது.

இதில் தொடா்புடைய கிராம நில உடைமைதாரா்கள் நிலப்பதிவு, பட்டா மாறுதல், நில ஒப்படைப்பு, நில நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறை தொடா்புடைய கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனு செய்து பயன் பெறலாம். மேலும் வருவாய்

ADVERTISEMENT

தீா்வாயத்தின்போது நேரில் மனுச் செய்யும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி உபயோகித்தல் மற்றும் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் போன்ற நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT