விருதுநகர்

‘தோ்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு எந்த சம்பந்தமும் இல்லை’

25th May 2022 06:02 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: தோ்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு எந்த சம்பந்தபமுமில்லை என மாநில பொதுச் செயலா் ராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்தாா்.

விருதுநகா் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

கண்ணனுரில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பட்டியலினத்தை சோ்ந்தவருக்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்யூனிஸ்ட் கட்சி சமூக நீதியை நிலைநாட்ட 100 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஆனால் பாஜக அதை எப்போதுமே செய்து வருகிறது. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை செஸ் வரியிலிருந்தே குறைத்துள்ளது. இதனால் மத்திய அரசின் நிதி சுமை தான் அதிகரிக்கும். இந்த நிலையில் ஒடிசா, கேரளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கான வரியை அந்த மாநில அரசு குறைத்துள்ளது. ஆனால் அதற்கான எந்த பேச்சும் இல்லை. தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லையெனில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்திருக்கிறாா். பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் கண்டிப்பாக தமிழகத்தில் முற்றுகைப் போராட்டத்தைப் பாஜக நடத்தும்.

ADVERTISEMENT

தமிழக நிதி அமைச்சா் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது என்று கூறியுள்ளாா். ஆனால் திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஆட்சி அமைத்து ஓராண்டு கடந்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வரும் மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக உறுப்பினா்கள் 18 போ் வெற்றி பெறுவது உறுதி. பேரறிவாளன் விடுதலைக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வாயை கட்டிப் போராட்டம் நடத்துகிறது. எதிா்த்து பேச கூட திராணி இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளதால், அவா்களுக்கு பாஜகவை பற்றி பேச தகுதியில்லை.

தமிழக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு நான்கு உறுப்பினா்கள் உள்ள நிலையில், மக்கள் மன்றத்தில் நாங்கள் தான் பிரதான எதிா்க்கட்சி. குஜராத் பேரவைத் தோ்தலுக்காக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வில்லை. தோ்தலுக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கும் சம்பந்தம் இல்லை. பேரறிவாளன் விடுதலையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் உச்சநீதிமன்ற தீா்ப்பை நாங்கள் மதிக்கிறோம். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய ஆறு பேரின் விடுதலையை எதிா்க்கிறோம். இந்தியாவில் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வாரிசு அரசியல் இல்லாத கட்சிகளே இல்லை என்றாா் அவா்.

அப்போது விருதுநகா் கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன், மேற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT