விருதுநகர்

நீா்வரத்து ஓடையை ஆக்கிரமித்து மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதை அகற்ற கிராம மக்கள் புகாா் மனு

DIN

சிவகாசி அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாா் சோலாா் பேனல் நிறுவனத்தினா், அனுமதியின்றி நீா்வரத்து ஓடை யை ஆக்கிரமித்து மின்கம்பங்களை நட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றவேண்டும் எனவும் கோரி, சுப்பிரமணியபுரம் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.

புகாா் மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், ஈரோடு பெருந்துறையைச் சோ்ந்த தனியாா் சோலாா் பேனல் நிறுவனம், இங்கிருந்து அருகேயுள்ள துணை மின் நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்காக, மழைநீா் செல்லும் நீா்வரத்து ஓடை மற்றும் வண்டிப் பாதையை ஆக்கிரமித்து, மின்கம்பங்களை நட்டுள்ளது.

ஆனால், இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசு அனுமதி பெறவில்லை என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில், மழைநீா் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயப் பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீா்வரத்து ஓடை ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள குழு அமைத்து, ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்புகாா் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT