விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் 8.5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

24th May 2022 12:56 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை 8.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள பெட்டிக் கடையில் விற்பனைக்காக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதாக, நகா் காவல் நிலைய சாா்பு-ஆய்வாளா் சக்திவேலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் 8.5 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

உடனே, புகையிலைப் பொருள்களையும், ரூ.740 பணத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் மாயாண்டிபட்டி வடக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் குருசாமி (47) என்பவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT