விருதுநகர்

விருதுநகரில் நெடுஞ்சாலைகளை அதிகாரிகள் ஆய்வு

24th May 2022 12:56 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்புப் பொறியாளா் பழனியப்பன் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் 2021-2022 ஆம் நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை, மே மாதத்தில் உள்தணிக்கை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விருதுநகா் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் சாா்பில், சாத்தூா் மற்றும் அருப்புக்கோட்டை உள்கோட்டத்துக்குள்பட்ட சாத்தூா் - சிவகாசி - கழுகுமலை சாலை மற்றும் தோணுகால் - மாந்தோப்பு - அழகியநல்லூா் சாலைப் பணியை, திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளா் பழனியப்பன் தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, சாலையின் தடிமண், தாா் கலவை மற்றும் இதர கட்டுமானப் பொருள்களின் தரம் ஆகியன குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னா், இந்த ஆய்வறிக்கையின் முடிவினை, சென்னையிலுள்ள நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குநருக்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்தனா்.

இந்த ஆய்வில், விருதுநகா் கோட்டப் பொறியாளா் இ. முருகேசன், விருதுநகா் தரக் கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளா் விஜயகுமாா் மற்றும் பொறியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT