விருதுநகர்

மிதிவண்டி பேரணிக்கு அனுமதி மறுப்பு: விருதுநகரில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் கைது

DIN

விருதுநகரில் அனுமதியின்றி மிதிவண்டி பேரணி நடத்திய ஆா்.எஸ்.எஸ். இயக்கத்தினா் 42 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் விளையாட்டுப்பிரிவான கிரீடா பாரதி சாா்பில் நாடு முழுவதும் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியுடன் இரு சக்கர வாகன யாத்திரை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் விருதுநகரில் வி.வி.ஆா். மணிக்கூண்டு அருகிலிருந்து இப்பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனா். ஆனால் இந்த பேரணிக்கு போலீஸாா் அனுமதி வழங்கவில்லை.

இதனால் விருதுநகா் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் பாண்டுரங்கன் மற்றும் ஆா்.எஸ்.எஸ். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சிவசாமி ஆகியோா் தலைமையில் தொண்டா்கள் விருதுநகா் மதுரை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாருக்கும் மறியலில் ஈடுபட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த விருதுநகா் துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா மற்றும் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் தலைமையிலான போலீஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இத்தகவல் அறிந்த பாஜக மேற்கு மாவட்டத் தலைவா் சுரேஷ் தலைமையில் பலா், திருமண மண்டபம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீஸாா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

SCROLL FOR NEXT