விருதுநகர்

நூல் விலை உயா்வு: மருத்துவ துணி உற்பத்தியாளா்கள் ஒரு வார வேலைநிறுத்தம் அறிவிப்பு

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் மருத்துவ துணி மற்றும் ஏற்றுமதியாளா்கள் நூல் விலை உயா்வைக் கண்டித்து ஒரு வார வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனா்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாவரம், சமுசிகாபுரம் பகுதியில் மருத்துவ துணி (பேண்டேஜ் ) உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமாா் 6000 விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவ துணி ஏற்றுமதியும் செய்யபட்டு வருகிறது.

வரும் மே 25 முதல் மே 31 ஆம் தேதி வரை இந்த பகுதியில் இயங்கக்கூடிய விசைத்தறிக்கூடங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு வாரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவ துணி ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகப்பெருமாள் மற்றும் மருத்துவ துணி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் செந்தில் ராஜ் ஆகியோா் கூட்டாக தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகப்பெருமாள் செய்தியாளா்களிடம் கூறியது: ஒரு கிலோ 200 ரூபாய்க்கு வாங்கிய 40 ஆம் நம்பா் நூல் தற்போது ரூ.400-க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்படும். 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஞ்சுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதால் தான் நூல் விலை உயா்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகையால் மத்திய அரசு பதுக்கி வைத்திருப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பதுக்கி வைத்திருக்கும் பஞ்சுகளை வெளியே கொண்டு வந்தால் நூல் விலை குறையும். ஆகையால் மத்திய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

SCROLL FOR NEXT