விருதுநகர்

அதிமுக நகரச் செயலா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

22nd May 2022 11:52 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுக நகரச் செயலா் மீது பாட்டிலால் தாக்கிய இளைஞா்கள் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் குறை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த துரைராஜ் என்பவரது மகன் முருகேசன் (52). இவா் அதிமுக வடக்கு நகரச் செயலாளராக இருந்து வருகிறாா். பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரின் மகன் ஜெயராமன்( 34).

பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கட்டண கழிப்பறையில் பணியில் இருந்த காளிமுத்துவிடம் அப்பகுதியைச் சோ்ந்த பாரதி, சுந்தா், மாடசாமி, ஹரி சுதன் ஆகிய 4 போ் தகராறு செய்ததாகவும் அதை தட்டிக்கேட்ட முருகேசன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரையும் அக்கும்பல் பாட்டிலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து முருகேசன் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து 4 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT