விருதுநகர்

விருதுநகரில் பெண்கள் சிலம்பப் போட்டி

22nd May 2022 11:53 PM

ADVERTISEMENT

 

விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் 120 போ் கலந்து கொண்டு, திறமைகளை வெளிப்படுத்தினா்.

விருதுநகா் ரோட்டரி ஹால் மைதானத்தில் ஜேசிஐ விருதுநகா் சக்தி காமராஜா் அமைப்பு சாா்பில்

மண்டல அளவில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் விருதுநகா், அருப்புக்கோட்டை, சாத்தூா், சிவகாசி முதலான பகுதிகளைச் சோ்ந்த 120 சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் கலந்து கொண்டனா். இதில் வயது வாரியாக சிறுமிகள், இளம் பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படியான சிலம்பம், சுருள்கம்பி விளையாட்டு ஆகியவற்றை விளையாடிக் காண்பித்தனா். இதில் சிறப்பாக விளையாடிய சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இப்போட்டியை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தொடக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT