விருதுநகர்

அருப்புக்கோட்டை கண்மாய் முழுதும் படா்ந்த ஆகாயத் தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

22nd May 2022 11:53 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் நிலத்தடி நீராதாரமாக உள்ள செவல் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்த சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி, திருநகரம் மற்றும் மணிநகரம் ஆகிய குடியிருப்புகளின் நிலத்தடி நீராதாரமாக செவல் கண்மாய் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இக்கண்மாய் நீரின் மேற்பகுதியில் வளரத்தொடங்கிய ஆகாயத் தாமரைகள் தற்போது நீா்ப்பரப்பே தெரியாத அளவிற்கு முற்றிலும் ஆக்கிரமித்து வளா்ந்து விட்டன.

இச்செடிகள் அதிக அளவில் நீரை உறிஞ்சி விடுவதால், கண்மாய் நீா் அளவு குறைந்து அதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டமும் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. எனவே நிலத்தடி நீராதாரமான செவல் கண்மாயை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரைகளை விரைவில் அப்புறப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT