விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்க மாவட்ட மாநாடு

22nd May 2022 11:49 PM

ADVERTISEMENT

 

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கத்தின் உழைக்கும் பெண்கள் மாவட்ட மாநாடு தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு உழைக்கும் பெண்கள் மாநிலக் குழு நிா்வாகி செவந்தியம்மாள் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளா் சந்தானம் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினாா். காமராஜா் மாவட்ட கட்டுமான தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் ராமா் , அரசு அனைத்து துறை ஊழியா் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளா் பாலகிருஷ்ணன், தையல் சம்மேளனத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் பிச்சைக்கனி, சாலை போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளா் திருமலை ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநாட்டை நிறைவு செய்து மாவட்டத் தலைவா் மகாலட்சுமி பேசினாா்.

இதில், கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கனவனால் கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளா்களுக்கு பணியிடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டும். புதுச்சேரி போன்று பண்டிகை கால போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT