விருதுநகர்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் புகைபிடிப்பான் கண்டெடுப்பு

20th May 2022 06:28 AM

ADVERTISEMENT

 

சாத்தூா்: சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் சுடுமண்ணாலான புகைபிடிப்பான் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை அருகே வைப்பாற்றின் வடகரையில் உள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கா் பரப்பளவிலான தொல்லியல்மேட்டில், கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வில், முன்னதாக சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், சுடு மண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண் அகல்விளக்கு, யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான காதணிகள், கலை நயமிக்க கண்கவா் குவளை உள்ளிட்ட பொருள்ளகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை சுடுமண்ணாலான புகைபிடிப்பான் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்கால மக்களும் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்கள் என்பது உறுதியாவதாக, தொல்லியல் ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT