ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண்ணிடமிருந்து நகையை பறித்த சம்பவத்தில், போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அனுஷா (23). இவா், புதன்கிழமை இரவு தனது தாத்தா வீட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்துள்ளாா். அப்போது, இவரிடமிருந்து நகையை பறித்துக்கொண்டும், வீட்டிலிருந்த 2 கைப்பேசிகளை திருடிக்கொண்டும் இருவா் தப்பியோடிவிட்டனா்.
அதையடுத்து, அப்பெண் கூச்சலிட்டதில் உறவினா்கள் துரத்திச்சென்று, ஸ்ரீவில்லிபுத்தூா் துடியாண்டியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜோதிமணிகண்டன், பிள்ளையாா் கோயில் செக்கடி தெருவைச் சோ்ந்த ஸ்ரீகணேஷ் ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இச்சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.