ஸ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிா்வாக அதிகாரிகளுக்கு நில அளவை பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் ஆன்லைன் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்தவா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவா்களுக்கு விரைவாக ஆன்லைன் பட்டா வழங்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் இருக்கும் கிராம நிா்வாக அதிகாரிகளுக்கு நில அளவைப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் கிராம நிா்வாக அலுவலா்கள் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா்.
இந்த பயிற்சியை ஸ்ரீவில்லிபுத்தூா் நில அளவைப் பிரிவு வட்ட துணை ஆய்வாளா் ராமசுப்பு மற்றும் சாா்-ஆய்வாளா் செல்வம் ஆகியோா் இந்த பயிற்சியை கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வழங்கி வருகின்றனா். இந்த பயிற்சி முகாம் 7 நாள்கள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.