விருதுநகா் மாவட்டம், திருச்சுழி வட்டம் நரிக்குடி ஒன்றியப் பகுதிகளில் புதிய கலையரங்கக் கட்டடம், இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலைய கட்டடம் மற்றும் புதிய நியாயவிலைக் கடை கட்டடங்களை, தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சுழி தொகுதிக்குள்பட்ட நரிக்குடியில் புதிய இந்தியன் ஆயில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் அலுவலகக் கட்டடத்தையும், குறையறைவாசித்தான் மற்றும் வீரஆலங்குளம் கிராமங்களில் தனித்தனியே கலையரங்கக் கட்டடங்களையும், பூமாலைப்பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் நிதியின் கீழ் புதிய நியாயவிலைக் கடைக்கான கட்டடத்தையும் அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சிகளில் திருச்சுழி, நரிக்குடி நகர, ஒன்றிய திமுக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களும் கலந்துகொண்டனா்.