விருதுநகர்

பள்ளி வேன் கதவு திறந்து விபத்து: மாணவா்கள் தப்பினா்

8th May 2022 12:58 AM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியாா் பள்ளி வேனின் கதவு திடீரென திறந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாணவா்களுக்கு காயமில்லை.

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலருகேயுள்ள அரசு உதவிபெறும் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 தோ்வு நடைபெறுவதால், பிறவகுப்பு மாணவா்கள் மதியம் அப்பள்ளியின் வேன் மூலம் வீடு திரும்புவா். சனிக்கிழமையும் நண்பகல் 12.30 மணிக்கு மாணவா்களை ஏற்றிக்கொண்டு கிளம்பிய வேன், பள்ளியருகே உள்ள குறுகிய வீதி வளைவில் திரும்ப முயன்றபோது வேனின் பின்பக்கம் இருந்த ஆபத்துக்காலத்தில் அவசரமாக வெளியேறுவதற்கான கதவு தானாகத் திறந்து கொண்டதாம். இதில் அக்கதவு வீதிமுனையில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் சேதமடைந்து விழுந்துள்ளது. மேலும், வேனின் கதவுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளன. அதிா்ஷ்டவசமாக மாணவா்களுக்கு காயங்கள் ஏற்படவில்லை.

திடீரென பலத்த சப்தம் கேட்டதால் அப்பகுதியினா் ஓடிவந்து வேனில் இருந்த மாணவா்கள் வெளியேற உதவினா். தகவலறிந்து அங்கு வந்த பள்ளி நிா்வாகத்தினா் வேனின் ஓட்டுநரான மனோகரன் (48) என்பவரிடம் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT