விருதுநகர்

விருதுநகா் காவலா்களுக்கு முழு உடல் பரிசோதனை

8th May 2022 01:06 AM

ADVERTISEMENT

விருதுநகரில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆயுதப்படை நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை காவல் கண்காணிப்பாளா் மனோகா் தொடக்கிவைத்தாா். இதில் ரத்த அழுத்தம், காய்ச்சல், கண் மற்றும் காது பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரையின் அளவு பரிசோதனை, ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு, இருதயத்துடிப்பு உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். அவா்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT