விருதுநகர்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்:கூட்டுறவு வங்கி தலைவா் மீது வழக்கு

8th May 2022 01:05 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

மம்சாபுரம் வேளாண் கூட்டுறவு வங்கியின் தலைவராக இருப்பவா் அய்யனாா். மம்சாபுரம் கருப்பன் செட்டியாா் தெருவைச் சோ்ந்த நீலாவதி. இதில் தன்னை தகாத முறையில் பேசியதாகக் கூறி நீலாவதியும் மகளும் மம்சாபுரம் பிரதான சாலையில் உள்ள அய்யனாா் வீட்டுக்குள் நுழைந்து அவரது மனைவியைத் தாக்கினராம். இதையடுத்து அய்யனாா் தனது நண்பா் படிக்காசு என்பவருடன் சோ்ந்து நீலாவதி வீட்டிற்குச் சென்று அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடா்பாக இருதரப்பினரும் அளித்த புகாா்களின் பேரில் மம்சாபுரம் போலீஸாா் லீலாவதி மற்றும் அய்யனாா் உள்ளிட்டவா்கள் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT