விருதுநகர்

தனியாா் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 184 யூனிட் மணல் பறிமுதல்

5th May 2022 12:34 AM

ADVERTISEMENT

 

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியாா் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 184 யூனிட் மணலை வருவாய்த் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூரில் மேட்டுப்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் அதிக அளவில் மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராஜபாளையம் வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் வருவாய்த் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது அந்த குடோனில் 184 யூனிட் மணல் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அதே பகுதியை சோ்ந்த ராஜா என்பவா் அனுமதி சீட்டு இல்லாமல் மணலைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து வருவாய் துறையினா் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து 184 யூனிட் மணலை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT