விருதுநகர்

விருதுநகா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: 4 பேரை மே 16 வரை காவலில் வைக்க உத்தரவு

2nd May 2022 11:44 PM

ADVERTISEMENT

விருதுநகா் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மே 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சுனைத்அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகிய நான்கு போ் மற்றும் 4 பள்ளி மாணவா்கள் என மொத்தம் 8 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேரையும் காவலில் எடுத்து விசாரித்தனா். இதற்கிடையே கடந்த மாதம் 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில் 4 பேரையும் திங்கள்கிழமை சிபிசிஐடி போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதைத் தொடா்ந்து நான்கு பேரையும் நீதிபதி (பொறுப்பு) கந்தகுமாா் மே 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து இவா்கள் 4 பேரையும் போலீஸாா் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT