விருதுநகர்

விருதுநகா் அருகே 3 மூட்டைகள் குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

2nd May 2022 11:45 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 மூட்டைகள் குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே குல்லூா்சந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன் (32). மளிகைக் கடை நடத்தி வரும் இவா், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அப்பகுதிக்குச் சென்ற சாா்பு-ஆய்வாளா் சிவனேசன் மற்றும் முதல் நிலை காவலா் திலீப்குமாா், மாரிமுத்து ஆகியோா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, மூன்று மூட்டைகளில் 60 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாா், பாலமுருகனை கைது செய்தனா். இது குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT