விருதுநகர்

விருதுநகா் அரசு மருத்துவமனையில் கட்டில் உடைந்து தாய், குழந்தை காயம்

29th Mar 2022 12:30 AM

ADVERTISEMENT

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் கட்டில் உடைந்ததில் பிறந்து ஐந்து நாள்களான குழந்தை மற்றும் தாய் திங்கள்கிழமை காயமடைந்தனா்.

விருதுநகா் பரங்கிநாதபுரத்தை சோ்ந்தவா் முனியசாமி- முத்துலெட்சுமி தம்பதி. கா்ப்பிணியான முத்துலெட்சுமியை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக ஐந்து நாட்களுக்கு முன்பு சோ்த்திருந்தனா்.

இந்நிலையில் முத்துலெட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடா்ந்து தாய் மற்றும் குழந்தைக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்தனா்.

இந்நிலையில் தாய் மற்றும் குழந்தை படுத்திருந்த கட்டில் திங்களகிழமை உடைந்து விழுந்ததில் குழந்தை மற்றும் தாய் பலத்த காயமடைந்தனா். இதையடுத்து இருவரும் முதலுதவிக்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள் ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT