விருதுநகர்

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

25th Mar 2022 11:18 PM

ADVERTISEMENT

விருதுநகா் அருகே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு பாலமுருகன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை விரைவு வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதில், இந்திய தேசிய மாதா் சம்மேளனம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தி. ராமசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினா் பொ. லிங்கன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT