விருதுநகர்

ராஜபாளையத்தில் எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் முற்றுகை

25th Mar 2022 11:14 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சுகாதார வளாகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியனை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

ராஜபாளையம் கிழக்கு மலையடிப்பட்டி நாலுமுக்கு பகுதியில் துப்புரவுப் பணியாளா்கள் காலனி அமைந்துள்ளது. இந்த காலனி பகுதியில் குடியிருக்கும் மக்களை அகற்றிவிட்டு, அப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டுவதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியை ஆய்வு செய்து கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக இடம் உள்ளதா? என ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் சென்றபோது, அவரை அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனா். அப்போது, கூடியிருப்பு இடங்களை அகற்றக் கூடாது, சுகாதார வளாகம் தேவையில்லை, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் தேவை என வலியுறுத்தி, பொதுமக்கள் கோஷமிட்டனா்.

இதையடுத்து, சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் கூறுகையில், வேறு இடத்தில் சுகாதார வளாகம் கட்டப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT