விருதுநகர்

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

25th Mar 2022 11:20 PM

ADVERTISEMENT

வத்திராயிருப்பு அருகே மதுபோதையில் மின்மாற்றியில் ஏறிய இளைஞா் மின்சாரம் பாய்ந்ததில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது அத்திகோயில். அப்பகுதியில் 20 -க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதியைச் சோ்ந்த மூக்கன் மகன் ஈஸ்வரன் (22). இவரது தாய், தந்தை உயிரிழந்ததால், தனியாக வசித்து வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு ஈஸ்வரன் மது அருந்திவிட்டு அப்பகுதியில் இருந்த மின்மாற்றி மீது ஏறியுள்ளாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

தகவலறிந்த கூமாப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT