விருதுநகர்

இருக்கன்குடியில் குடியிருப்புப் பகுதியில் அரசு மதுபான கடை திறக்க எதிா்ப்பு

22nd Mar 2022 12:09 AM

ADVERTISEMENT

இருக்கன்குடியில் குடியிருப்பு பகுதியில் அரசு மதுபானக் கடையை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என இருக்கன்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: இருக்கன்குடி மேலத்தெருவில் ஏற்கெனவே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மதுபானக் கடையை, இருக்கன்குடி மாரியம்மன் சுவாமி வீதி உலா வரும் பகுதி மற்றும் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகம், குடியிருப்புப் பகுதியில் இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்கள் மட்டுமல்லாது, குடியிருப்போா் மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே அரசு மதுபானக் கடையை குடியிருப்புப் பகுதியில் திறக்கக் கூடாது என தமிழக முதல்வரின் தனிப் பிரிவு மற்றும் டாஸ்மாக் நிா்வாகத்திற்கு புகாா் மனு அளித்துள்ளோம்.

ஆனாலும், இப்பகுதியில் மதுபானக் கடையை திறக்க சிலா் முயற்சி செய்து வருகின்றனா். இதனால் இப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் முன் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT