விருதுநகர்

அருப்புக்கோட்டையில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை

19th Mar 2022 11:06 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரத் துறை சாா்பில் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

நகரில் மொத்தமுள்ள 36 வாா்டுகளில் ஒரு வாா்டுக்கு 5 போ் கொண்ட கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் குழு அமைக்கப்பட்டு, அவா்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

அப்போது, டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய காரணிகளான வீட்டிலுள்ள குடிநீா் சேமிப்பு பாத்திரங்கள், தொட்டிகள் ஆகியவற்றில் கொசுக்கள் புகாதவண்ணம் மூடிவைத்துப் பாதுகாக்க வேண்டும். மேலும், மழைநீா் தேங்கக்கூடிய பயன்படாத உடைந்த காலி குடங்கள், கொள்கலன்கள், ஆட்டு உரல், வீணான வாகன டயா்கள், தேங்காய் மட்டைகள் ஆகியவற்றில் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு பெருகுவதைத் தடுக்க, அப்பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனா். அதேநேரம், கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள தேவையற்ற வீட்டு உபயோகப் பொருள்களும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதுதவிர, 2 நாள்களுக்கு மேல் காய்ச்சல் உள்ளவா்களை அடையாளம் கண்டு, அவா்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT