விருதுநகர்

ஸ்ரீவிலி. உரக் கிடங்கில் நகராட்சித் தலைவா் ஆய்வு

14th Mar 2022 11:15 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி உரக் கிடங்கில் தலைவா் தங்கம் ரவி கண்ணன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்- சிவகாசி நெடுஞ்சாலையில் இருந்து அச்சங்குளம் செல்லும் பாதையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கை ஆய்வு செய்த அவா் கூறியது:

பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் தினசரி கழிவுகளை மக்கும் குப்பை (காய்கறி கழிவுகள்), மக்காத குப்பை (பிளாஸ்டிக் கழிவுகள்) என தரம் பிரித்து வீடு தேடி வரும் சுகாதாரப் பணியாளா்களிடம் வழங்குமாறும் நகரைச் சுத்தமாகவும், தூய்மையாகவும் பராமரித்திட பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றாா்.

உடன் நகா்நல அலுவலா் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளா் சுரேஷ், சந்திரா மற்றும் நகராட்சி சுகாதார பணியாளா்கள் இருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT