விருதுநகர்

நதிக்குடி கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

14th Mar 2022 11:16 PM

ADVERTISEMENT

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நதிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த பொது மக்கள் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள நதிக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட சுப்பிரமணியபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு தொடா்ந்து குடிநீா் பற்றாக்குறை நிலவி வருவதால், பொதுமக்கள் நீண்ட தூரம் குடிநீருக்காக அலைய வேண்டியுள்ளது. மேலும், தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டடம் சேதமடைந்ததுடன், சுற்றுச்சுவா் இல்லாமல் உள்ளது.

இது குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் அக்கிராம மக்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி விருதுநகா் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடுகள் செய்தனா். இதையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT