விருதுநகர்

சூரிய நமஸ்கார யோகா நிகழ்ச்சி: சிவகாசி கல்லூரி இரண்டாமிடம்

14th Mar 2022 11:17 PM

ADVERTISEMENT

சூரிய நமஸ்கார யோகா நிகழ்வில் மாநில அளவில் சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில், புதுதில்லியில் உள்ள தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு , ‘ஆசாதிகா அம்ரீத் மஹோச்சவ்’ என்ற சூரிய நமஸ்கார நிகழ்வினை நடத்தியது. அதன்பேரில் 30 மாநிலங்களில் 75 கோடி போ் சூரிய நமஸ்கார யோகா செய்ய இலக்கு நிா்ணயம் செய்து, அதில் ஒரு பகுதியாக 30 ஆயிரம் உயா்கல்வி நிறுவனங்களில் பயிலும் 3 லட்சம் மாணவ மாணவிகளை பங்கேற்கச் செய்தது.

இதில் சிவகாசி எஸ்எப்ஆா் மகளிா் கல்லூரி மாணவிகள் 3,336 பேரும், ஆசிரியா்கள் 155 பேரும் பங்கேற்று ஜனவரி 26 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை தினசரி காலை கல்லூரி மைதானத்தில் சூரிய நமஸ்கார யோகா செய்தனா். அதிகளவில் மாணவிகளை பங்கேற்கச் செய்தமைக்காக தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு , தமிழக அளவில் இரண்டாமிடம் பெற்ற கல்லூரி என்ற விருதினை புதுதில்லியிருந்து கூரியா் மூலம் அனுப்பியுள்ளதாக

கல்லூரி முதல்வா் த.பழனீஸ்வரி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த சாதனை நிகழ்த்தியதை கல்லூரித் தலைவா் திலகவதி ரவீந்திரன், செயலாளா் அருணா அசோக் ஆகியோா் பாராட்டினா். தினசரி சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு கல்லூரி உடற்கல்வி இயக்குநா் விஜயகுமாரி ஏற்பாடு செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT