சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் உயிரிழந்ததாக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடத்தைச் சோ்ந்தவா் அன்புபாண்டி (27). இவா் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சின்னகாமன்பட்டியில் கடந்த 3 நாள்களாக சுடலைமாடசாமி கோயிலில் திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழா முடிவடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை மாலையில் கோயில் வளாகம் மற்றும் அதனைச்சுற்றி கட்டப்பட்டிருந்த மின் விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகளை அகற்றும் பணியில் அன்புபாண்டி ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த சாத்தூா் நகா் போலீஸாா் அன்புபாண்டியின் சடலத்தை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.