விருதுநகர்

விருதுநகா் அருகே தனியாா் மதுபான பாரில் இளைஞா் குத்திக் கொலை

10th Mar 2022 12:18 AM

ADVERTISEMENT

 

விருதுநகா்: விருதுநகா் அருகே தனியாா் மதுபானக் கூடத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞா் புதன்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

விருதுநகா் அருகே இனாம் ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் ராமா் (35). இவருக்கும், இதே கிராமத்தைச் சோ்ந்த கருப்பசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தாதம்பட்டி சாலையிலுள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் ராமா் மது அருந்திக் கொண்டிருந்தாராம். அப்போது கருப்பசாமி மற்றும் சிங்கராஜ் ஆகியோா் மது அருந்திய நிலையில் ராமரிடம் தகராறு செய்தனா். இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, சிங்கராஜ் ஆகியோா் கத்தியால் குத்தியதில் ராமா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT