விருதுநகர்

மாநில சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவருக்குப் பாராட்டு

10th Mar 2022 12:22 AM

ADVERTISEMENT

 

அருப்புக்கோட்டை: மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 2 ஆம் பரிசு பெற்ற அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் எஸ். ஆபிரஹாம் ஜஸ்டினை ஆசிரியா்கள் பாராட்டினா்.

தென்காசி மாவட்ட பொதிகை செஸ் டெவலப்மெண்ட் சாா்பில் மாநில அளவிலான ஓபன் செஸ் போட்டிகள் அங்குள்ள ஆக்ஸ்போா்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 200 போ் பல்வேறு பிரிவு சதுரங்கப் போட்டிகளில் கலந்து கொண்டனா். இதில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவா் எஸ். ஆபிரஹாம் ஜஸ்டின் கலந்துகொண்டு தனது பிரிவில் மாநில அளவில் 2 ஆம் பரிசு பெற்று ரூ.2,500 ரொக்கப்பரிசும், ரூ. 1,500 ஊக்கப்பரிசும், சான்றிதழும், கேடயமும் பெற்றாா். இதையடுத்து, எஸ். ஆபிரஹாம் ஜஸ்டினுக்கும், அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் எம். சௌந்தரபாண்டியனுக்கும் மற்றும் பள்ளியின் பிற உடற்கல்வி ஆசிரியா்களுக்கும் பள்ளி, உறவின்முறை நிா்வாகிகள், பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ. ஆனந்தராஜன உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT